Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, February 20

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே


தொடர்-11

குரானின் மலையியல் மயக்கங்கள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியிடப்படுகிறது.

குர்ஆனில் மலைகள் பற்றிய அறிவியல் சான்றுகளாக முஸ்லிம்கள் குறிப்பிடும் விடயங்களை மறுப்பு என்ற பெயரில் மழுப்பியுள்ளார்.

முதலாவதாக மலைகளை குர்ஆன் முளை என்றும் மலைகள் இருப்பதால்தான் பூமி எம்மை அசைத்துவிடாமல் பாதுகாக்கிறது என்று குர்ஆன் கூறுகிறது. இவற்றை மறுக்கப்புகுந்த செங்கொடி, மலைகள் முளைகளாக பூமியின் அடுக்குகளை இணைத்துவைத்திருக்கிறது என்பது மதவாதிகளின் அசட்டுத்துணிச்சல் என்கிறார். மலைகள் முளைகள் என்பது எமது அசட்டுத்துணிச்சல் என்றால் EARTH எனும் புத்தகத்தில் DR. Frank Press என்பவர் மலை முளையின் தொழிற்பாட்டைத்தான் மேற்கொள்கிறது என்று குறிப்பிடுகிறார் (பக்கம் 435) இதுவும் அசட்டுத்துணிச்சல்தாமோ?

அதுமட்டுமல்ல. பூமியில் இவ்வாறு மலைகள் இருப்பதனால்தான் எம்மை அசையாதிருக்கிறது என்று குறிப்பிடுவது இவருக்கு மயக்கம் தருகிறதாம். ஏன்? பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதில்லையா? என்ற அற்புதமான (?) கேள்வியை கேட்டு தனது அறிவின் திறன் இவ்வளவுதான் என்பதை அழகாக விளக்குகிறார். பூமியில் மலை முளைகளாக இருப்பதற்கு காரணம் பூமியின் அடுக்குகளை ஒன்றாக சேர்ப்பதற்குத்தான். இவ்வாறில்லையெனில் பூமி பூமியாகவே இருக்காது என்று மேற்படி புத்தகத்திலும் உள்ளது. நில நடுக்கம் ஏற்படுவது கண்டத்தட்டுக்கள் உரசுவதால். இதை தடுப்பது மலையின் வேலையல்லவே! நாம் கூறுவதற்கு பதிலளிக்காமல் வேறு எதற்கோ முடிச்சுப்போடிகிறார்.

அடுத்ததாக பூமியில் மலையின் உயரத்துக்குக்கூட செல்ல முடியாது என்று குர்ஆனில் உள்ளதை எடுத்துக்காட்டுகிறார். இதில் காமெடி என்னெவென்றால் இதில் மறுப்பதற்கு அறிவியல் ரீதியில் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் நைஸாக குர்ஆன் தமிழாக்கத்திற்கு தாவி குர்ஆனில் அப்படியில்லை இவர்கள்தான் திரித்துவிட்டார்கள் என்கிறார்.
இதை இவ்வாறு விளக்குகிறார்:

“பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்” குரான் 17:37. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது. ஆனால் இதே வசனம் ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் இப்படி இருக்கிறதா? “நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம். நிச்சயமாக நீர் பூமியை பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது.” இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்? கர்வம் பிடித்தலையும் மனிதர்களுக்கு குரானின் அறிவுரை இது பூமியை பிளந்துவிட முடியுமா? மலையின் உச்சிக்கு சென்றுவிட முடியுமா? எனவே உன்னை பெரிதாய் நினைத்து கர்வத்துடன் நடக்காதே. இதுதான் குரான் வாயிலாக முகம்மது சொல்லவருவது. ஒரு ஒப்பீட்டுக்காக கூறுவது. பின்னர் மனிதர்கள் மலையின் உச்சியை அடைந்து விடுவார்கள், பூமியை பிளந்து விடுவார்கள் (பிளப்பது என்றால் இரண்டு துண்டுகளாகவா?) என்பதெல்லாம் முகம்மதுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இதை எப்படி திரித்துவிட்டார்கள்.

ஜான் ட்ரஸ்ட் என்பது அண்மைக்கால மொழிபெயர்ப்பு அல்ல. அதில் நாமே சுட்டிக்காட்டுமளவிற்கு தவறாக பல இடங்களில் மொழி பெயர்த்துள்ளனர். மேலும் அவர்கள் அறிவியல் விடயங்களையும் கவனிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு தர்ஜமாவை இவர் தேடிப்பிடித்து எழுதுவது இவருடைய பலவீனத்தையே சுட்டிக்காட்டுகிறது. உலகில் மிகக்குறுகிய உயரத்தையுடைய மலையின் உயரம் கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர். மனிதன் சென்றிருப்பது 3 கிலோ மீட்டர். குறைந்த அளவிற்குக்கூட செல்ல முடியாது என்பது குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு மிகப்பெரிய சான்று.

இவரது வாதங்களுக்கு விரிவாக பதிலளிக்கும் வகையில் எந்த சரக்குமில்லை. அதனால் மிகச்சுருக்கமாக் பதிலளிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுமிடத்தில் அதிக விளக்கம் இடெம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும். குர்ஆனில் குறைகாண இயலாது என்பதற்காக தமிழாக்கங்களுக்கிடயிலுள்ள வேறுபாட்டை கையிலெடுத்தது இவருடைய இயலாமையை மேலும் தெரியப்படுத்துகிறது. இவரது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் அரபு இலக்கண ரீதியில் இது தவறு என்றுதான் இதை மறுக்க வேண்டும்! அதற்கு தயாரா? (இவருக்கு அரபு தெரியாது என்பதை தேனி பற்றிய விடயத்தில் குறிப்பிடுவோம்.) குர்ஆனில் மலையியல் மயக்கம் என்பது இவரது மதிமயக்கம்தான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

5 comments:

saarvaakan said...

குரான் 17:37 பற்றி சிறு ஆய்வு.
சரியான மொழி பெயர்ப்பு எது?
இதற்கு டான்ஜில் (www.tanzil.info) என்ற இணையத் தளம் பல மொழிகளில் குரான் மொழிபெயர்ப்பு அளிக்கும் தளம் மற்றும் குரான் வார்த்தைகளுக்கு அர்த்தம் அளிக்கும் கார்பஸ் குரான்(corpus.quran.com) என்ற‌ தளத்திலும் அர்த்தம் தேடினோம்.
.குரானில் குறிப்பிடபடுவது என்ன?
இருவிதமான பொருள்கள்.
1.மலையின் உச்சியை அடைய முடியாது.(அறிவியலின் படி தவறு)
2.மலை உச்சி அளவிற்கு உயரமாக முடியாது.
டான் ஜில் தளத்தில் பார்த்தால் அடைபுக்குறியை நீக்கி பார்த்தால் முதல் அர்த்தமும்,அடைப்புக் குறியோடு பார்த்தால் இரண்டாம் அர்த்தமும் வருகிறது.
17.37:மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
மூல அரபி வார்த்தையை ஆய்வு செய்ய எண்ணி அந்த வார்த்தையை துலான் என்று கண்டு கார்பஸ் குரான் தளத்தின் மூலம் அர்த்தம் பார்த்தால்
(17:37:13)- طُولًا
–tulan -(in) height.-உச்சி(யளவு)-(N – accusative masculine indefinite noun)
துலான் என்ற வார்த்தை குரானில் இதே விதமாக இந்த வசனத்தில் ம்ட்டுமே பயன் படுத்தப்பட்டு உள்ளது.
துலான் என்பதற்கு சரியான அர்த்தம் என்பதை ஆறாம் நூற்றாண்டு குரேஷிய அரபி மொழி இலக்கணம் கொண்டு விளக்குங்கள்.
துலான் -tulan-(in) height-உச்சி(யளவு)
முடிவு என்ன?
துலான் என்பதின் அர்த்தம் உச்சி அளவு என்ரால் அடைப்புக் குறியினுள் கூற வேண்டிய அவசியம் என்ன‌
ஆங்கிலத்திலும் (in) height)அவ்விதமாகவே கூறப்பட்டுள்ளது.
ஆகவே அடைப்புக் குறிஅயை பொறுத்தே அவ்வாக்கியத்தின் அர்த்தம் மாறுகிறது.

A.Mohamed Ihsas said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் சார்வாகன் அவர்களே

என்னிடம் ஆறாம் நூற்றாண்டு இலக்கணம் அர்த்தங்களைக்கொண்ட நூற்கள் தற்போதைக்கு இல்லை. அதனால் அதன் படி இப்போது விளக்குவது கடினம். இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதிலுள்ளது. ஆங்கில மொழியாக்கங்களில் 17:37ம் வசனத்திற்கு in என்பது அடைப்புக்குள் வரவில்லை.

17:37.Nor walk on the earth with insolence: for thou canst not rend the earth asunder, nor reach the mountains in height இது யூசுப் அலி மொழிபெயர்த்தது.

தமிழ் மொழிபெயர்ப்பிலும் நான் அறிந்தவரை ஜான் ட்ரஸ்ட்டைத்தவிர வேறு மொழியாக்கங்களில் அளவு என்பது அடைப்புக்குறியினுள் இடப்படவைல்லி. ஜான் ட்ர்ஸ்டைப்பொருத்தவரி அதில் பல தவறுகளுள்ளன. சில நேரம் அடிப்புக்குள் இட வேண்டியதை மொழிபெயர்ப்பாகவும் மொழிபெயர்ப்பை அடைப்புக்குறியினுள்ளும் இட்டுவிடுவர்.(இது அடுத்த தொடரில் சம்பந்தப்பட்டுள்ளதால் அதில் விபரிக்கப்படும் பார்த்துக்கொள்க!)

ஆங்கிலத்தில் in என்பது அடைப்புக்குள் வருவதாக காட்டியிருப்பது கார்ப்பஸ் குர்ஆன் எனும் வெப்சைட்டிலுள்ளது. அது சொல்லுக்குச்சொல் அர்த்தம் செய்வதால் அவ்வாறு அடைப்புக்குள் இடம்பெற்றிருக்கலாம். மொத்தமாக வரும்போது அடைப்பு வராது என்பதற்கு ஆங்கில் தர்ஜமாக்கள் சான்றாக உள்ளன.

கார்ப்பஸ் குர்ஆன் எனும் வெப்சைட்டை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

அறிவு said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கீழே தந்துள்ள சில மொழியாக்கங்கள் சகோதரர்கள் பார்வைக்கு.

Sahih International: And do not walk upon the earth exultantly. Indeed, you will never tear the earth [apart], and you will never reach the mountains in height.

Pickthall: And walk not in the earth exultant. Lo! thou canst not rend the earth, nor canst thou stretch to the height of the hills.

Yusuf Ali: Nor walk on the earth with insolence: for thou canst not rend the earth asunder, nor reach the mountains in height.

Shakir: And do not go about in the land exultingly, for you cannot cut through the earth nor reach the mountains in height.

Muhammad Sarwar: Do not walk proudly on the earth; your feet cannot tear apart the earth nor are you as tall as the mountains.

Mohsin Khan: And walk not on the earth with conceit and arrogance. Verily, you can neither rend nor penetrate the earth, nor can you attain a stature like the mountains in height.

Arberry: And walk not in the earth exultantly; certainly thou wilt never tear the earth open, nor attain the mountains in height.

இவை அனைத்தும் சகோதரர் பீ ஜே அவர்களின் மொழியாக்கத்திற்கு (“பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்” - குர்ஆன்17:37) இணையாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.

உண்மையை உணருங்கள் சகோதரர்களே. அதன்பால் விரைந்து வாருங்கள்.

செங்கொடி said...

இந்த இடுகைக்கான மறுப்பு செங்கொடியில் வெளியிடப்பட்டுவிட்டது. ஆர்வமுள்ளவர்கள் காணலாம்.

http://senkodi.wordpress.com/2012/05/09/senkodi-islam15/

Unknown said...

wooow good

Post a Comment